Thursday, 15 August 2024

சிவனின் அதிசயங்கள்/sivanin athisayankal/https://www.youtube.com/@Shivaeswaran2024

அண்மையில், சிவனின் அதிசயங்கள் என்று ஒரு youtube சேனல் பார்த்தேன். அதைக் காணும் போது எனக்கு ஏகப்பட்ட ஆச்சரியம். எனது சின்ன வயதில் விகடக்கச்சேரிகள் மற்றும் பல குரல் மன்னர்களின் நிகழ்ச்சிகள் போன்ற பலவற்றை பார்த்திருக்கிறேன். இவற்றில் விகடக் கலைஞர்களும் சரி, பல குரல் மன்னர்களும் சரி ஒரு உயிரினத்தை போலவோ பிற மனிதர்களைப் போலவோ பேசி நடித்துக் காட்டுவார்கள். தத்துரூபம் ஆக அவர்கள் யாரைப்போல அல்லது எதைப் போல நடித்துக் காட்டுகிறார்களோ  அவர்களைப் போலவே அவற்றைப் போல அப்படியே இருக்கும். பல ஆர்கெஸ்ட்ராக்களில் கச்சேரியின் இடைவேளையில் இந்த பலகுரல் மன்னர்கள் நிகழ்ச்சி நடைபெறும். பெரும்பாலும் திரைப்பட நடிகர் நடிகைகளை வைத்து அந்த நடிகரின் வசனத்தை இந்த நடிகர் பேசியிருந்தால் எப்படி இருக்கும்? இதற்கு பதிலா இந்த காட்சியில் அவர் நடித்திருந்தால் எப்படி இருக்கும்? என்று பேசி காட்டுவார்கள். 
 உதாரணத்திற்கு, எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில்  அசோகன் பேசுவதை நம்பியார் பேசியிருந்தால் எப்படி இருக்கும், சிவாஜி பேசியிருந்தால் எப்படி இருக்கும் ரகுவரன் பேசி இருந்தால் எப்படி இருக்கும் ரஜினிகாந்த் பேசியிருந்தால் எப்படி இருக்கும் என்றெல்லாம் பேசி நடித்து காட்டுவார்கள். 
 அதேபோல, சுமைதாங்கி படத்தில் வரும் மயக்கமா கலக்கமா பாடலை டி எம் சௌந்தரராஜன் பாடியிருந்தால் எப்படி இருக்கும் டிவி ஸ்ரீனிவாஸ் பாடி இருந்தால் எப்படி இருக்கும் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியிருந்தால் எப்படி இருக்கும் சந்திரபாபு பாடி இருந்தால் எப்படி இருக்கும் என்றெல்லாம் சுவாரசியமாக பாடி ஆடி காட்டுவார்கள். இன்றைக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலே கூட  இது மாதிரியான கலை நிகழ்ச்சிகளுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். 
 அதேபோல, வீடியோ ஒன்றாக இருக்கும் ஒலிக்கின்ற ஆடியோ பாடல் ஒன்றாக இருக்கும். அதை அதை மசாலா மிக்ஸ் என்றெல்லாம் கூட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவார்கள். பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கும். சரி விஷயத்துக்கு வருகிறேன்.
 அண்மையில் யூட்யூபில் ஒரு சேனலை பார்த்தேன். 
 அதனின் பெயர் சிவனின் அதிசயங்கள் @Shivaeswaran2024 என்பதாகும்.
 அதிலும் இப்படிப்பட்ட வீடியோக்கள் அதாவது வீடியோக்கள் ஒன்றாகவும் ஆடியோக்கள் ஒன்றாகவும் - படக்காட்சி ஒன்றாகவும் பாடல் வரிகள் வேறாகவும் பொருத்தமாக இணைக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டு வலம் வருகின்றது. இன்றைக்கு சுதந்திர தினமான 15 8 2024 ல் நான் பார்த்த வரையில் அந்த சேனலுக்கு 900 பேர் வாடிக்கையாளர்களாக - சப்ஸ்கிரைபர்களாக இருக்கிறார்கள். இன்றைக்கு கூட சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசு அவர்கள் பேசுகின்ற வசனத்தை பாட்ஷா ரஜினிகாந்த் அவர்கள் நடித்த பாட்ஷா பட காட்சியில் பொருத்தமாக இணைத்திருக்கிறார்கள். ஆஹா.. டக்கென்று பார்த்தால் படத்தில் தோன்றுவது ரஜினியை அல்லது விசுவா என்று ஆச்சரியம் கலந்த கேள்வி பிறக்கின்றது. 
 முன்னதாக, இந்த சிவனின் அதிசயங்கள் சேனலில் ஆரம்ப காலத்தில் வட்டக்குழியில் ஒற்றைக் கோலி என்ற ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்கள். 
 அதேபோல, கை விரல்களால் தேங்காய் உரிப்பது எப்படி என்றும் வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். பார்க்கப் பார்க்க ஒரு ஆச்சரியமும் அந்த சாதனை குறித்து பாராட்டுதல்களும் நமக்குள் வெளிப்படுகின்றன. 
 இந்த சேனலில் நான் பார்த்த இன்றுவரை 950 வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொன்றாக பார்க்க எனக்கு பொறுமை இல்லாத போதும் அவ்வப்போது சில வீடியோக்களை பார்க்கின்ற போது அந்த வீடியோக்களால் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. இந்த சேனலில் குறிப்பிடத் தெரிந்த அம்சம் அதன் எடிட்டிங் என்னும் படத்தொகுப்பில் சிறப்பாக வெளிப்படுகின்றது. இது போன்ற சேனல்களில் உங்களுக்கு ஈடுபாடு இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து இது போன்ற சேனல்களை வரவேற்று பார்த்து மகிழுங்கள். காரணம் யான் பெற்ற இன்பத்தை இந்த வையகமும் பெற வேண்டும் என்பதே என் விருப்பமாகும். குறிப்பிட்ட அந்த சேனலின் லிங்க்கை கீழே கொடுத்துள்ளேன். பார்த்து ரசியுங்கள். உங்கள் விருப்பங்களையும் உங்களின் விமர்சனங்களையும் அந்த சேனலுக்கு தெரிவியுங்கள். 
 சேனலின் லிங்க் :-
https://www.youtube.com/@Shivaeswaran2024
#https://www.youtube.com/@Shivaeswaran2024

ஆண்களின் தமிழ்ப் பருவப் பெயர்கள்

சித்திரை 2ஆம் நாளிலேயே இந்தளவுக்கு 'வேக்காடு' வே(ர்)த்துப் பூத்து பாடாப்படுத்துதே... அப்படின்னா அக்கினி நட்சத்திரத்துல எ...