தங்கத்தமிழ் சங்கத்தமிழ்
Tuesday, 15 April 2025
ஆண்களின் தமிழ்ப் பருவப் பெயர்கள்
Thursday, 15 August 2024
சிவனின் அதிசயங்கள்/sivanin athisayankal/https://www.youtube.com/@Shivaeswaran2024
Tuesday, 22 February 2022
மும்மொழிச் சிலேடை
#மும்மொழிச்_சிலேடை
தமிழிலக்கணத்தில் ஒருவகை. இருபொருள்பட பேசுவதைத்தான் -எழுதுவதைத்தான் சிலேடை அணி என யாப்பிலக்கணத்தில் குறிப்பிடுவர். அதை #இரட்டுறமொழிதல் என்பர். அதேபோல, #மும்மொழிச்_சிலேடை என்பது 3 பொருள்கள்பட யாப்பது.
அதற்கு எ,கா:
"தாமரையில் சேர்தமிழ கம்" என முடியும் ஒரு #மும்மொழிச்_சிலேடை வெண்பா. முழுச்செய்யுள் நினைவுக்கு வரவில்லை(மன்னிக்க)
இதிலே,#தாமரையில் என்பது #மும்மொழிச்_சிலேடை .
தாமரை என மலரைக் குறிப்பது; தா+மரை எனும்போது தாவும் மானைக் குறிப்பது; தாம்+அரை எனும்போது
தமது இடுப்பில் என குறிப்பது.
என்னே என் தமிழின் சொல் விளையாட்டு!! யப்பா..!!
ஆக, இம் #மும்மொழிச்_சிலேடை யை அடியேனும் கையாண்டு பார்த்தால் என தோன்றியது. வெண்பாவில் யாப்பது எனக்குச் சிரமம்தான்.
எனவே, இப்படி படைத்துள்ளேன்.
இரசிக்க முடியாவிடினும் சகித்துக் கொள்க.
*அழகியாம்
அப்பாவை தனக்கு
அடிபிறழாது
அரிய வெண்பாவை
யாத்துத் கந்தேன்
காதலினால்.
★அப்பாவை படித்த
அப்பாவை
அழைத்து வந்தாள்-அவளின்
அப்பாவை.
அன்புடன்,
கம்கோ சித்தர்
Friday, 10 December 2021
அருஞ்சொற்கள் தமிழ் அகராதி
அ
தமிழ் மொழியின் முதல் எழுத்து🌷
உயிரெழுத்து
நெடுங்கணக்கின் முதல் உயிரெழுத்து🌷
அழகு🌷
ஓம் என்ற பிரணவத்தின் முதல் எழுத்து🌷
🌷சிவன், பிரம்மா, விஷ்ணு🌷
🌷அகாரம் (விஷ்ணு it)
🌷சுட்டெழுத்துகளில் ஒன்று
(சிலர் இவ்எழுத்தை பிள்ளையார் சுழி போலவும் பயன்படுத்துவர்)
(இவ்எழுத்து தமிழ் எண்ணாக பயன்படுத்தும்போது 8 என்ற எண்ணாக கொள்ளப்படுகிறது)
📕📕📕📕📕 🌷🌷🌷🌷🌷📕📕📕📕📕
அஃகுதல்
அளவில் குறுகுதல்🌷
📕📕📕📕📕🌷🌷🌷🌷🌷📕📕📕📕📕
அக்கசாலை
🌷உலோகவேலை செய்யும் இடம்
🌷நாணயசாலை
📕🌷📕🌷📕
அகக்களி
🌷மன மகிழ்ச்சி
📕📕📕📕📕🌷🌷🌷🌷🌷
அகங்கை
🌷உள்ளங்கை
–-------------------------------
(கங்கை என்பது ஒரு நதி. தமிழில் ஒரு சில சொற்களுக்கு முன் 'அ' என்ற எழுத்து சேரும்போது முன்னர் சொன்ன சொல்லின் பொருளினது எதிர்மறை வந்துவிடும். எடுத்துக்காட்டு: தர்மம் × அதர்மம்.
ஆக, இவ்இடத்தில் கங்கை × அகங்கை எனக் கொண்டோமென்றால் ' அகங்கை' என்பது கங்கை அல்லாத நதிகளைக் கொண்டதாகிறது என்பது எனது கருத்து.)
📕🌷📕🌷📕
அகசியம்
வேடிக்கை
🌸🌸🌷🌼🌼
அகசு
★பகல்
★பொழுது
🌷🌷🌸🌷🌷
அகடு
★நடு (மத்தி)
★வயிறு
⭐⭐🌴⭐⭐
அகணி
★வயல்
★விடம்
★கடுக்காய்
★தென்னை
★பனை
★நார்
(தென்னை நார் கிராமப்புற வட்டார வழக்கில் அவுணி என வழங்கப்படுகிறது. குடிசை வீடு ஓலைகளால் வேயப்படும்போது இந்த நாரினைக் கட்டும் கயிறுபோல் பயன்படுத்தப்படுகிறது).
🌱🌱🌸🌱🌱
அகண்டாகாரம் - அளவு படாத வடிவம்
அகதி - வேலமரம் , திக்கற்றவர்
அகத்திணை - மனத்தில் நிகழும் இன்ப ஒழுக்கம்
அகநிலை -ஊர் , கடவுள்
அகப்பற்று --நான் என்னும் பற்று
அகப்பா --மதில் , அகழி
அகப்பாட்டு -அகநானூறு
.அகமருடணம்- நீருக்குள் நின்று செய்யும் ஒரு மந்திர செபம்
அகம் -நான் ,கர்வம் ,உள் ,வீடு ,மனம் ,,பாவம் ,அகநானூறுr ,மார்பு ,ஞானம் ,,பூமி , மலை
அகம்மியம்-- அணுகக் கூடாதது, அறியக் கூடாதது
அகம்மியை- இழிகுலப் பெண்
அகம்படி- மனம், அகத்தொண்டு, உள்ளிடம், அடியார்
அகம்படிப் பெண்டு வேலைக்காரி
அகம்படி முதலி வேலைக்காரன்
அகம்பாடு உள்ளீடான த்துவம்
அகரம்- ஊர், பார்ப்பனச் சேரி, தமிழில் அ எனும் எழுத்து
அகராதி அகர முதலிய எழுத்துகளால் ஆன சொற்களின் கோவை
(சில வட்டார வழக்கில் ★திமிராகவோ, மற்றவர் கருத்துக்கு முரண்பட்டோ பேசுபவரை அகராதி பிடித்தவர் என குறிப்பிடுவர்)
அகரு- அகில்
அகர்நிசம் பகலும் இரவும், நாளெல்லாம்
அகலம்- மார்பு, விசாலம், பெருமை
அகலவுரை விருத்தியுரை
அகலுள் ஊர், பெருமை,அகலம், தெரு, நாடு
அகவர் மங்கலமாகப் பாடுவோர், புகழ்வோர்
அகவல் கடவுதல்,அழைத்தல்,ஆசிரியப்பா, ஆடல்.
(மயில் சத்தமிடுவதை கத்துகிறது எனக் கூறாமல் மயில் அகவுகிறது என சொல்வதே மரபு).
அகவிருள்- அஞ்ஞானம்
அகவிலை தானியவிலை, ஒருபொருளின் உற்பத்திக்கான அடக்கவிலை
அகவை வயது
அகழான் வயல்எலி
அகளங்கன் சோழன்
அகளம் நீர்ச்சால் , யாழின் பத்தர், நிட்களம்
அகற்சி அகலம், நீங்குதல்
அகன்றில் ஆண் அன்றில் பறவை
அகாதம் ஆழம், பள்ளம்
அகாதம் வஞ்சகன், கபடம் நிறைந்தவன்
அகாலமிருத்து- அகாலமரணம்
அகி இரும்பு,பாம்பு,ஆவணி
அகிஞ்சனன் தரித்திரன்
அகிதம நன்மையற்றது, தீமை
அகிம்சை கொல்லாமை, வருத்தாமை
அகிருத்தியம் தப்பான செய்கை
அகிலம் உலகம், எல்லாம்
அகிலாண்டம் பூமி, சகல அண்டம்
அகில் ஒரு மரம்
அகிற்கூட்டு ஏலம்,கற்பூரம்,எரிகாசு, சந்தனம், தேன் என்னும் ஐந்தின் கூட்டு
அகூபாரம் ஆமை, கடல்
அகூபாரன் சூரியன், ஆமை
அகை வருத்தம்,கூறுபாடு
அகைதல் எரிதல் ஒடிதல் தவிர்த்தல் வருந்தல், எழுதல்
அகைத்தல் அறுத்தல், கிளைத்தல், முறித்தல், வருத்தல்
(அகைத்தல், அகைத்தல் இரண்டுக்கும் வேறுபாட்டை கவனத்தில் கொள்க..அதேபோல, வருந்தல்,வருத்தல் இவ்இரண்டுக்கும் வேறுபாட்டை கவனத்தில் கொள்க.).
அகோசரம் அறியப்படாதது
அகோரம் அச்சம் தோற்றுவிக்காதது, பயம் விளையாதது
அகோராத்திரம் பகலும் இரவும்
அக்கசாலை உலோக சாலை, ஆயுதச்சாலை, கம்மியர் (ஆசாரி) சாலை,நாணய சாலை
🌸🌸🌸🌸🌸🌹🌹🌹🌹🌹
#கச்சகம் குரங்கு
******"*"*
நூ -- எள்விளங்காய், எள், யானை,, ஆபரணம்,
நூக்குதல் செலுத்தல் , தள்ளுதல், பொடித்தல், ஊசலாடல், எறிதல், தூண்டுதல், சாத்துதல்
★★மேற்கண்ட சொற்களைக் கொண்டமைத்த கவிஞர் கண்ணதாச முருகனின் கவிதையை வாசிிக்க கீழ்காணும் இணைப்பைச் சொடுக்கவும்.
https://www.facebook.com/100004377731669/posts/2138915919597645/
நூங்கு பெருமை, மிகுதி
நூபுரம் கால்சிலம்பு
நூல் பஞ்சு நூல், இழை, கல்வி நூல், ஆலோசனை,சாத்திரம், தாலி, ஆகமம்
நூல்வெண்மாடம் கூடாரம்
நூவு எள்
நூழிலாட்டு கொன்று குவித்தல்
நூழில் கொன்று குவித்தல், செக்கு, தொளை (ஓட்டை, துளையிடும் கருவி), அலை, ஒரு கொடி, யானை
நூழை நுண்மை, துவாரம், குகை, சிறுவாயில்
நூறு சுண்ணாம்பு, ஓர் எண், சதம், நீறு(சாம்பல்), பொடி
ஆண்களின் தமிழ்ப் பருவப் பெயர்கள்
சித்திரை 2ஆம் நாளிலேயே இந்தளவுக்கு 'வேக்காடு' வே(ர்)த்துப் பூத்து பாடாப்படுத்துதே... அப்படின்னா அக்கினி நட்சத்திரத்துல எ...
-
அண்மையில், சிவனின் அதிசயங்கள் என்று ஒரு youtube சேனல் பார்த்தேன். அதைக் காணும் போது எனக்கு ஏகப்பட்ட ஆச்சரியம். எனது சின்ன வயதில்...
-
#மும்மொழிச்_சிலேடை தமிழிலக்கணத்தில் ஒருவகை. இருபொருள்பட பேசுவதைத்தான் -எழுதுவதைத்தான் சிலேடை அணி என யாப்பிலக்கணத்தில் குறிப்பிடுவர். அதை #...